முத்தான மூன்று தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி!


முத்தான மூன்று தமிழ்ப் புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டி உறுதுணைபுரிந்த தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் மற்றும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவினருக்கும் நமது உளமார்ந்த நன்றிகளையும் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையில் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மிகவும் அக்கறையுடன் விழாவினை நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திரு. ரஜித் சார் அவர்களின் படைப்புத் திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட மிகவும் தகுதியானவர். மேலும் நமது சமூகத்திற்காகச் சேவை செய்யும் நல்ல உயர்ந்த மனம் உடையவர். இந்த நிகழ்ச்சிக்கானத் திட்டமிடல் மற்றும் சிங்கப்பூரில் உள்ள குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சமூகத்திற்கு உதவிடும் வகையில் நன்கொடையாக நிதி திரட்டுவதற்கு அவர் உண்மையாகவே கடும் முயற்சி செய்திருந்தார்.
இந்த உன்னத நோக்கத்திற்காக என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் தங்கள் நிதி ஆதரவிற்கான பங்களிப்பைச் செய்யும் விதத்தில் ஒவ்வொருவரும் கைகோர்த்தமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள்
தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்
 WhatsApp Image 2021-09-28 at 17.44.01
+12