- Views 1538
- Likes
18/1/20 அன்று பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஆடல் பாடல் பட்டிமன்றம் பரிசளிப்புகள் என பன்முகத் தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது.
மாணவரணியிணர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியது பாராட்டுதலுக்குறியது. சிறப்பான நெறியாளுகை செய்தனர் மாணவியர் செல்வி நிரஞ்சனா மற்றும் செல்வி சந்தியா. குழந்தைகள் அரினி மற்றும் தன்வியின் (இருவரும் மிகச் சிறப்பாக பாடினர்) பாரதிதாசனின் தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி, பாடகி இலாவண்யாவின் கிராமிய திரை இசைபாடலில் பயணிக்கத் துவங்கி, AkT ஆனந்தக்கண்ணன் குழுவினர் படைத்த தமிழர் பண்பாட்டு பறை இசை, பாடல், விடுகதை, தாலாட்டு, கும்மி என தமிழர் கலைகளை படைத்த கதம்ப நிகழ்சியில் முழு வேகம் பெற்று, நாவரசர் புலவர் திரு.மா.இராமலிங்கம் அவர்களை நடுவராக கொண்டு நான்கு தொடக்கக் கல்லூரி மாணவர்கள் (செல்வன்.கார்திக், செல்வன. சுசூகி, செல்வி. பார்கவி, செல்வி. விசுணுவர்தினி) மற்றும் இரு ஆசிரியர்கள் (திரு.செரிஃப், முனைவர் இராசி சீனிவாசன்) பங்கெடுத்த பட்டிமன்றம் நிகழ்சிக்கு மகுடம். நகைச்சுவை நாவரசர் புலவர் மா. இராமலிங்கம் அவர்களின் நவரசமிக்க அற்புதமான பேச்சில் அரங்கம் சிரிப்பொலியில் மிதந்தது. தலைப்பையொட்டிய அவருடைய கருத்துரைகளும் எடுத்துக்காட்டுக்களும் அனவரையும் ஈர்த்ததில் வியப்பில்லை. மேலும் அவருடைய சிறப்பான தீர்ப்பிற்கு மக்களின் கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பொங்கல் விழா திட்டமிடப்பட்டு செம்மையாக நடந்தேறியது!
அநேக மக்களின் பேராதரவோடு விழா வெற்றியடையக் காரணமானவர்கள் அனைவருக்கும் விழாக் குழுவினர் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல..!
18/1/20 அன்று பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஆடல் பாடல் பட்டிமன்றம் பரிசளிப்புகள் என பன்முகத் தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது.
மாணவரணியிணர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியது பாராட்டுதலுக்குறியது. சிறப்பான நெறியாளுகை செய்தனர் மாணவியர் செல்வி நிரஞ்சனா மற்றும் செல்வி சந்தியா. குழந்தைகள் அரினி மற்றும் தன்வியின் (இருவரும் மிகச் சிறப்பாக பாடினர்) பாரதிதாசனின் தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி, படகி இலாவண்யாவின் கிராமிய திரை இசைபாடலில் பயணிக்கத் துவங்கி, AkT ஆனந்தக்கண்ணன் குழுவினர் படைத்த தமிழர் பண்பாட்டு பறை இசை, பாடல், விடுகதை, தாலாட்டு, கும்மி என தமிழர் கலைகளை படைத்த கதம்ப நிகழ்சியில் முழு வேகம் பெற்று, நாவரசர் புலவர் திரு.மா.இராமலிங்கம் அவர்களை நடுவராக கொண்டு நான்கு தொடகக் கல்லூரி மாணவர்கள் (செல்வன்.கார்திக், செல்வன. சுசூகி, செல்வி. பார்கவி, செல்வி. விசுணுவர்தினி) மற்றும் இரு ஆசிரியர்கள் (திரு.செரிஃப், முனைவர் இராசி சீனிவாசன்) பங்கெடுத்த பட்டிமன்றம் நிகழ்சிக்கு மகுடம். நகைச்சுவை நாவரசர் புலவர் மா. இராமலிங்கம் அவர்களின் நவரசமிக்க அற்புதமான பேச்சில் அரங்கம் சிரிப்பொலியில் மிதந்தது. தலைப்பையொட்டிய அவருடைய கருத்துரைகளும் எடுத்துக்காட்டுக்களும் அனவரையும் ஈர்த்ததில் வியப்பில்லை. மேலும் அவருடைய சிறப்பான தீர்ப்பிற்கு மக்களின் கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பொங்கல் விழா திட்டமிடப்பட்டு செம்மையாக நடந்தேறியது!
அநேக மக்களின் பேராதரவோடு விழா வெற்றியடையக் காரணமானவர்கள் அனைவருக்கும் விழாக் குழுவினர் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல..!
நல்ல ஒருங்கிணைப்பும் திட்டமிடலும் தனிநபரின் முன்னிருத்தல் இல்லா நிலையும் பல நல்ல நிகழ்ச்சிகளை தமிழ்ச் சமுகத்திற்கு அளிக்கமுடியும் என்பது இந்நிகழ்வின் மூலம் கண்கூடாய் விளங்கியது. 11/01/2020 அன்று நடந்த உயர்நிலை மாணவர்களுக்கான மொழிப்பெயர்ப்பு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் அதற்கு மகுடம் சேர்த்தது போல் வெற்றி பெற்ற பள்ளி ஆசிரியர்களை முதன்முதலில் கழகம் சிறப்பித்தது முத்தாய்ப்பு.
மாணவர்களால் நிகழ்ச்சி முகநூல் வழி நேரலையும் செய்யப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக அமைய அரும்பாடுபட்ட செயற்குழுவினருக்கும், மாணவரிணியருக்கும், தலைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்! வெல்க தமிழ்!